பாய்லர் வெடித்து உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி நிறுவனத்தில் தயாரிக்கப்படும் மின்சாரம் தமிழ்நாடு, புதுச்சேரி போன்ற தென் மாநிலங்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை 2 வது அனல்மின் நிலையத்தில் அலகு 6-ல் பாய்லர் வெடித்ததில் நிரந்தர, மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் உட்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சார்புதீன் என்ற பணியாளர் ஏற்கனவே இறந்த நிலையில் இன்று சண்முகம் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 2 பேர் உயிரிழந்ததால் இன்று என்.எல்.சி 2 வது அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டு பாய்லர் வெடித்த விபத்தில் உயிரிழந்த 2 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரிக்கை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…
திருச்சி : நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காவிரி சரபங்கா உபரிநீர்த் திட்டத்தை அமல்படுத்தியதற்கு விவசாயச் சங்கங்கள் சார்பில்…
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…