புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி வட்டத்தில் அமைந்துள்ள பகுதி மாங்காடை அடுத்த கோவூரில் அணு கார்டன் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் ஆவார்.இவர் அதே பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வந்துள்ளார்.
மேலும் சரியாக பைனான்ஸ் காட்டாத வாகனங்களை பறிமுதல் செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர் திரும்ப வீடு திரும்பவில்லை.
இதன் காரணமாக பெற்றோர் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இந்நிலையில் யுவராஜ் கோவூர், ஈஸ்வரன் நகர் பகுதியில் நேற்று காலை சரமாரியாக வெட்டுப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் யுவராஜின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
பின்னர் காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் யுவராஜுக்கு திருமணமாகி இருப்பதாகவும் அவருடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இதன் காரணமாக அவருக்கும், அவரது மனைவியின் உறவினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதன் காரணமாக யுவராஜின் மனைவியின் உறவினர்கள் அவரை கொலை செய்தார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருகினறன.
மேலும் யுவராஜ் கொலை செய்யப்பட்ட இடத்தில் காலி மது பாட்டில்கள் கிடந்ததால், இரவு மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்ற பாணியிலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…