கோட்டைப்பட்டினம் வந்த 4 மீனவர்களின் உடல் – அமைச்சர், ஆட்சியர் உள்ளிட்டோர் அஞ்சலி.!

Default Image

இலங்கை கடற்படை கப்பல் மோதி உயிரிழந்த 4 தமிழக மீனவர்களின் உடல்கள் கோட்டைப்பட்டினம் வந்ததையடுத்து அமைச்சர் விஜயபாஸ்கர் அஞ்சலி. 

இலங்கை கடற்படை கப்பல் மோதியல் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்த சாம்சன், மெசியா, நாகராஜ் மற்றும் செந்தில்குமார் ஆகிய 4 மீனவர்களின் உடல்கள் இலங்கை யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, இன்று காலை இலங்கை கடலோர காவல்படையினர் சர்வேதேச எல்லையில் 4 பேரின் உடல்களை இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது.

இதையடுத்து அவர்களிடம் இருந்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் உடல்களை பெற்றுக்கொண்டதை அடுத்து, உயிரிழந்த 4 மீனவர்களின் உடல்கள் கோட்டைப்பட்டினம் எடுத்து செல்லப்பட்டது. அங்கு அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் சக மீனவர்கள் உயிரிழந்த 4 மீனவர்களின் உடலுக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

இதனைத்தொடர்ந்து மண்டபம், தங்கச்சிமடம், உச்சப்புலி, திருப்புல்லானை என மீனவர்களின் சொந்த ஊர்களுக்கு தனித்தனி ஆம்புலன்ஸ்கள் மூலம் 4 மீனவர்களின் உடல்கள் அனுப்பிவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
Jitin Prasada
Congress MP Rahul Gandhi - BJP MP Pratap Chandra Sarangi
suriya and bala
Congress MPs - BJP MPs Protest in Parliament
Protest against Amit shah speech
GOLD PRICE