கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டி.! ஏராளமானோர் கலந்துகொண்டனர்.!
- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனவர் கிராமங்களில் பாரதத் தாய் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 29-ம் ஆண்டு படகுப் போட்டிகள் நடைபெற்றது.
- இப்போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 29 நாட்டுப் படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனவர் கிராமங்களில் பாரதத் தாய் இளைஞர் நற்பணி மன்றம் சார்பாக 29-ம் ஆண்டு படகுப் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 29 நாட்டுப் படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.
இப்படகுப் போட்டியில் முதலிடம் பிடிக்கும் மீனவருக்கு 25 ஆயிரம் ரூபாயும், இரண்டாவது இடம் பிடிக்கும் மீனவருக்கு 20 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது. மேலும், மூன்றாவது இடம் பிடிக்கும் மீனவருக்கு 15 ஆயிரம் ரூபாயும், நான்காவது இடம் பிடிக்கும் மீனவருக்கு 10 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், படகுப் போட்டியை காண சேதுபாவாசத்திர மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் சேதுபாவாசத்திரம் கடற்கரைப் பகுதியில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர். மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் பொதுமக்கள் ஏராளமானோர் கண்டுகளித்து சென்றனர்.