விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்தவருக்கு ப்ளூ கார்னர் நோட்டிஸ்.
நடிகர் விஜய் சேதுபதி, இலங்கை கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு படத்தில், முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், முரளிதரன் இலங்கையில் நடைபெற்ற போரில் சிங்களவர்களுக்கு ஆதரவாக பேசியதாக, அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விஜய் சேதுபதிக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பியது.
பலரின் எதிர்ப்புக்கு மத்தியில், விஜய் சேதுபதி இப்படத்தில் இருந்து விலகியுள்ள நிலையில், அவரது மகளுக்கு ட்வீட்டர் மூலமாக ரித்திக் என்பவர் பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விசாரணையில், மிரட்டல் விடுத்தவர் இலங்கையை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ரித்திக்கை கைது செய்ய இண்டர்போல், புளு கார்னர் நோட்டிஸ் அனுப்ப இருக்கிறது. இந்த நோட்டிஸ் அனுப்பப்பட்ட பின், அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.
புளு கார்னர் நோட்டிஸ் என்றால் என்ன?
புளு கார்னர் நோட்டிஸ் என்பது, சர்வதேச காவல்துறையால் அனுப்பப்படும் விசாரணை நோட்டிஸ் ஆகும். இந்த நோட்டிஸ் கிரிமினல் குற்றம் செய்துவிட்டு, தலைமறைவாக இருப்பவரை கண்டுபிடிப்பது அல்லது அடையாளம் காண கொடுக்கப்படும் நோட்டிஸ் ஆகும்.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…