ஹெச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் : ரத்தம் தானமாக கொடுத்தவர் மரணம் …!
சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் தானமாக கொடுத்தவர் உயிரிழந்துள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி தொற்று கொண்ட ரத்தம் செலுத்திய விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
கமுதி அருகே திருச்சிலுவைபுரத்தை சேர்ந்த எச்.ஐ.வி பாதித்த இளைஞரின் ரத்தம், கர்ப்பிணிக்கு செலுத்தப்பட்டது.சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி ரத்தம் தானமாக கொடுத்தவர் உயிரிழந்துள்ளார். குற்ற உணர்ச்சியால் தற்கொலைக்கு முயன்றவர், சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.