யார்தான் அரசியலுக்கு வரவேண்டும் …? யார்தான் அடுத்த முதல்வர் ஆகவேண்டும்….?
யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரக்கூடிய உரிமை ஜனநாயக நாட்டில் உண்டு.அதனை நமது அரசியலமைப்பு சட்டமும் நமக்கு வழங்கியுள்ளது .ஆனால், தமிழகத்தில் ஏற்பட்டுருக்கிற அரசியல் வெற்றிடத்தை கணக்குப்போட்டு ”காற்றுள்ள போதே தூற்றிக் கொள்வோம் என்று கூறிக்கொண்டு வருவது தான் சந்தர்ப்பவாதம் என்பார்கள். குறிப்பிட்ட காலம் சாதாரணத் தொண்டனாக அரசியலில் ஈடுபட்டு மக்களுக்கு சேவை செய்து, அதன் பின்னரே தேர்தலில் குதித்து ஆட்சியை பிடிப்பதுதான் நியாயம்.நேற்று கட்சி ஆரம்பித்து, இன்று ஆட்சியை பிடித்துவிடலாம் என்று எண்ணுவது சரியல்ல.மக்களிடையே பிரபலம் என்பதால் மட்டுமே ஒருவர் முதல்வர் ஆவதற்கான தகுதியை பெற்றுவிட்டதாக கூறமுடியாது.