குளோபல் மருத்துவமனையில் கணவர் நடராஜனை சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா
சென்னை: உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கணவர் நடராஜனை, வி.கே. சசிகலா இன்று காலை சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சந்திக்க 5 நாட்கள் பரோலில் நேற்று சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, நேற்று மாலை சாலை வழியாக சென்னை வந்து சேர்ந்தார்.
இதையடுத்து, இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு பெரும்பாக்கம் வந்த சசிகலா, கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த நிலையில் சிகிச்சை பெற்று வரும் நடராஜனை, குளோபல் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.