சென்னையில் கனமழை கேள்விக்குறியானது முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள்…!
சென்னை;
சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை போலவே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்று பெய்த கனமழையால் சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீரால் செலவதற்கு வழியில்லாமல் சாலைகளின் ஓரங்களில் மழைவெள்ளம் போல் நீர் பேருக்கடுத்து ஓடுகின்றது. இதனால் சாலைகளில் பல இடங்களில் குண்டுகுழிகள் இதுவரை சரிசெய்யாமல் இருப்பதால் வாகனங்கள் தடுமாறும் நிலையும் ஏற்படுகின்றது.
இதனால் அலுவலகத்திற்க்கு செல்வோர் மற்றும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் என அனைவரும் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். சரிசெய்யாமல் உள்ள சாலைகளை கனமழை பெய்வதற்குள் சரிசெய்யவேண்டும், சாலைகளில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என வாகனஓட்டிகள், சமுக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்