தமிழக அரசுக்கும் முதல்வருக்கும் எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தினகரன் ஆதரவாளர்கள் சேலத்தில் பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர்.
இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் விநாயகம் அளித்த புகாரின் அடிப்படையில் தினகரன் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ வெங்கடாசலம், பகுதி செயலாளர் சரவணன் உள்ளிட்ட 10 பேரை சேலம் அன்னதானப்பட்டி போலீசார் கைது செய்தனர்.
துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததற்காக தினகரன் உட்பட அவரது ஆதரவாளர்கள் 30 பேர் மீது தேசதுரோகம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் சேலம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எனவே தேசதுரோக வழக்கில் தினகரன் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்தில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். தொண்டர்கள் குவிந்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்வது, செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு, பழனியப்பன் மீதான பழைய வழக்கை தோண்டி போலீஸை விட்டு தேடவிட்டது என தினகரனின் ஆதரவாளர்களை அச்சுறுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார். தினகரன் ஆதரவாளர்களை மிரட்டுவதற்கு காவல்துறை ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
முதல்வருக்கும் ஆட்சிக்கும் எதிராக தினகரனும் அவரது ஆதரவாளர்களும் பேசாமல் இருப்பதற்காக அவர்கள் கைது செய்யப்படலாம் என தெரிகிறது. அந்தவகையில் தினகரன் கைது செய்யப்படலாம் என்பதால் அவரது வீட்டின் முன் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் பரபரப்பு நிலவுகிறது.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…