சிவகங்கையில் வாலிபர் சங்க தலைவரை தாக்கிய ஜாதிவெறி கும்பல் கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) சிவகங்கை மாவட்ட அமைப்பாளர் VP.வசந்தகுமாரை சாதியை சொல்லி திட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய ஜாதி வெறி கயவர்களை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி(TNUEF ) மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்(DYFI) சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் மானாமதுரை பேரூராட்சி அலுவலகம் அருகில் நடைப்பெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்திய குழு உறுப்பினர் ரெஜிஸ் குமார் ,TNUEFன் மாநில செயலாளர் முனியசாமி ,மாவட்ட செயலாளர் பொன்னுசாமி,வாலிபர் சங்க தலைவர் சுரேஷ் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள் .