டெங்கு கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்’ முற்றுகை.
டெங்கு கொசுவை ஒழிக்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை ‘இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்’ முற்றுகையீட்டு போராட்டம் நடத்தினர்.
பாளை தாலுகா செயலாளர் கருணா தலைமை தாங்கினார், நெல்லை தாலுகா செயலாளர் அசோக், தலைவர் நம்பிகுமார், பொருளாளர் முருகேசன், மாவட்டச் செயலாளர் ராஜகுரு, துணைச் செயலாளர் ராஜேஷ், துணைத் தலைவர் பிரபாகரன், பாளை தாலுகா பொருளாளர் ஜான், கௌதம், ராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநகராட்சி நிர்வாகத்திற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கவில்லை என அதிகாரிகள் தரப்பில் தட்டிக்கழிக்கும் நிலைமையே உள்ளது. நெல்லை பகுதியில் கோடகன் கால்வாய் செப்பனிடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதால் சாக்கடை நீர் தேங்கி கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. இதை சரிசெய்ய வலியுறுத்தி 16 ம் தேதி மக்கள் பங்கேற்புடன் போராட்டம் நடத்தவும் திட்டமிடப்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார்கள்.