குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு கடிதங்களையும் பார்சல்களை அஞ்சலகங்கள் மூலம் அனுப்ப புது வசதி….!
சென்னை தியாகராய நகர் தலைமை அஞ்சல் நிலையத்தில் வெளிநாட்டு தபால்களுக்கென நேற்று தனி கவுண்டர் துவக்கப்பட்டது. இவ்வசதியை துவக்கி வைத்துப் பேசிய தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல் அதிகாரி சம்பத் இவ்வசதியானது இன்னும் இதர பெரிய அஞ்சலகங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார். தனியார் கூரியர் நிறுவங்களை விடவும் மிகவும் குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு கடிதங்களையும் பார்சல்களை அஞ்சலகங்கள் மூலம் அனுப்பலாம் என்றும் அவர் தெரிவித்தார்.