சென்னையில் பெய்து வரும் கனமழை குறித்து முதலமைச்சர் கூறியுள்ள நிலையில் தற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கிறார். சென்னை வண்ணாரப்பேட்டையில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார். 5 வார்டுகளின் அதிகாரிகள் விவரங்கள் இன்று மதியம் 2 மணிக்குள் தெரியவரும். அதன்பிறகு அனைத்து குப்பைகளும் அப்புறப்படுத்த வேண்டும். எந்த இடத்திலும் குப்பை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அனைத்து அமைச்சர்களின் சந்திப்பின்போது அனைத்து குப்பைகளையும் அப்புறப்படுத்திவிட்டார்கள் என்ற நிலையை உருவாக்கி தரவேண்டும் என்று கூறியிருக்கிறோம்.
பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதன் காரணமாகவே இப்பணி தற்போது முடக்கிவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதா என்பதை மாலை நாங்கள் பார்வையிட இருக்கிறோம். மின்கம்பி கேபிள்கள் வெளியே இருப்பதை மறைத்து வைக்க வேண்டும் என்றும் மக்கள் புகார் கூறியிருக்கிறார்கள். எனவே இதுபோன்ற 47 இடங்களை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். இதனை சரிசெய்ய 2 அல்லது 3 நாட்கள் வேண்டும் என்று மின்வாரிய ஊழியர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், கடந்த 2015 எங்களுக்கு ஒரு முன்னோட்டமாக இருந்ததனால், தொழில்துறை முதன்மை செயலாளர் தலைமையில், மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள், ஜோர்னல் அதிகாரி உட்பட பல்வேறு அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து எந்தெந்த பகுதி தாழ்வான பகுதி, எங்கெங்கே தண்ணீர் தேக்கமடையும் என்பதை எல்லாம் கண்டறிந்து அதற்கான தீர்வுகள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 3 மாங்களாக இந்த நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறு செய்ததால் தான் 28 செ.மீ, 30 செ.மீ என்று ஒரே இடத்தில் பெய்த மழைக்கு, தண்ணீரில் தேங்கி இருக்காமல் அடுத்த நாள் காலைக்குள் அப்புறப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக்கூடிய சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு தெரு வாரியாக மோட்டார் பம்பு செட்டுகள் வைக்கப்பட்டு தண்ணீர் அப்புறப்படுத்தப்படுகிறது.
அதேபோல் 173 ஜேட்ரோ பம்புகளும் வாங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்த காரணத்தால் தான், சென்னை மிக சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…