மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது!அமைச்சர் செல்லூர் ராஜு …

Default Image
                                      Image result for சென்னையில் குப்பையை அகற்றும் பணி

சென்னையில் பெய்து வரும் கனமழை குறித்து முதலமைச்சர் கூறியுள்ள நிலையில் தற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கிறார். சென்னை வண்ணாரப்பேட்டையில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார். 5 வார்டுகளின் அதிகாரிகள் விவரங்கள் இன்று மதியம் 2 மணிக்குள் தெரியவரும். அதன்பிறகு அனைத்து குப்பைகளும் அப்புறப்படுத்த வேண்டும். எந்த இடத்திலும் குப்பை இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும். அனைத்து அமைச்சர்களின் சந்திப்பின்போது அனைத்து குப்பைகளையும் அப்புறப்படுத்திவிட்டார்கள் என்ற நிலையை உருவாக்கி தரவேண்டும் என்று கூறியிருக்கிறோம். 
பல பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

                                       Image result for சென்னையில் குப்பையை அகற்றும் பணி
இதன் காரணமாகவே இப்பணி தற்போது முடக்கிவிடப்பட்டுள்ளது. இதனையடுத்து குப்பைகள் அனைத்தும் அகற்றப்பட்டு விட்டதா என்பதை மாலை நாங்கள் பார்வையிட இருக்கிறோம்.  மின்கம்பி கேபிள்கள் வெளியே இருப்பதை மறைத்து வைக்க வேண்டும் என்றும் மக்கள் புகார் கூறியிருக்கிறார்கள். எனவே இதுபோன்ற 47 இடங்களை நாங்கள் கண்டறிந்திருக்கிறோம். இதனை சரிசெய்ய 2 அல்லது 3 நாட்கள் வேண்டும் என்று மின்வாரிய ஊழியர் மற்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். 

                          Related image
கடந்த 3 மாதங்களுக்கு முன்பாகவே முதலமைச்சர் எடப்பாடி அவர்கள், கடந்த 2015 எங்களுக்கு ஒரு முன்னோட்டமாக இருந்ததனால், தொழில்துறை முதன்மை செயலாளர் தலைமையில், மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் அவர்களுக்கு கீழ் உள்ள அதிகாரிகள், ஜோர்னல்  அதிகாரி உட்பட பல்வேறு அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்து எந்தெந்த பகுதி தாழ்வான பகுதி, எங்கெங்கே தண்ணீர் தேக்கமடையும் என்பதை எல்லாம் கண்டறிந்து அதற்கான தீர்வுகள் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 3 மாங்களாக இந்த நடவடிக்கை எடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். இவ்வாறு செய்ததால் தான் 28 செ.மீ, 30 செ.மீ என்று ஒரே இடத்தில் பெய்த மழைக்கு, தண்ணீரில் தேங்கி இருக்காமல் அடுத்த நாள் காலைக்குள் அப்புறப்படுத்தப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பக்கூடிய சூழல் தற்போது உருவாகியிருக்கிறது. ஒவ்வொரு தெரு வாரியாக மோட்டார் பம்பு செட்டுகள் வைக்கப்பட்டு தண்ணீர் அப்புறப்படுத்தப்படுகிறது. 
அதேபோல் 173 ஜேட்ரோ பம்புகளும் வாங்கப்பட்டிருக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள் எடுத்த காரணத்தால் தான், சென்னை மிக சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றனர் என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்