இலங்கையில் கடல் எல்லையில் மீன் பிடித்ததாக கூறி பிடித்திருந்த படகுகளை மீட்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடற்படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இலங்கை வசம் இருந்த படகுகளை மீட்க சென்றபோது, தமிழக மீனவர்களுக்கு போதிய எரிபொருள் வழங்கப்படவில்லை. அதே சமயம் இந்திய கடலோரப் பகுதியை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்த போது, வழியில் ஒரு படகு பழுதாகி நின்றதால் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக மீனவர்களுக்கும், இந்திய கடற்படை வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட தமிழக மீனவர்களை இந்திய கடற்படை வீரர்கள் தாக்கியுள்ளனர். தங்களை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்ததாக மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.மேலும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலைகளை யும் இந்திய கடற்படை வீரர்கள் சேதப்படுத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்திய கடற்படைத் தாக்குதலில் காயமடைந்த மீனவர் செந்தில்குமார் உள்ளிட்ட மீனவர்கள் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…