தமிழகத்திலும் நிர்பயாக்கள்…காதலன் கண்முன் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்…!
காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே நெடுமரம கிராமத்தைச் சேர்ந்தவர் 20 வயது பெண். இவர் கூவத்தூரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இந்த பெண்,தினமும் தனது வேலையை முடித்துவிட்டு, நெடுமரத்தில் உள்ள தனது காதலனைச் சந்தித்து வருவாராம்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று, இந்த பெண் வேலையை முடித்துவிட்டு,தனது காதலனோடு வீட்டிற்க்கு சென்றிருக்கிறார். அப்போது, இவர்களை நான்கு பேர் கொண்ட கும்பல் பின்தொடர்ந்துள்ளனர்.
இந்த பெண் மற்றும் அவளின் காதலன் உடன் நெடுமரம் கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த அந்த கும்பல், காதலனை அடித்தும், பின்பு கத்தியைக் காட்டி மிரட்டியும், காதலன் கண் முன்னே அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் அந்த 4 கயவர்கள்.
பாதிக்கப்பட்ட அந்த பெண், 4 பேரால் பலாத்காரம் செய்யப்பட்டதை தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். அந்த நண்பர் காவல்துறையினரிடம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்,சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவத்தில் பொதுமக்கள் சிலர் கொடுத்த அடையாளங்களைக் வைத்து குற்றவாளிகளைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர். 4 பேர் கொண்ட கும்பல், இளம் பெண்ணை பலாத்காராம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று நிர்பயா என்ற டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி தனது நண்பருடன் பேருந்தில் பயணித்து கொண்டிருக்கும் பொது போன்றொரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் .தமிழகத்திலும் இதே போன்று பல நிர்பயாக்களின் வாழ்க்கையை சிதைக்கிறது இந்த மாதிரியான காமுக கும்பல் ……