நாமக்கல் மாவட்டத்தில் தலித்மக்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட காவல்துறை ஆணையரிடம் புகார்….!
நாமக்கல் மாவட்டத்தில் பேளுக்குறிச்சி மின்னாம்பள்ளி மேலப்பட்டி விட்டம்பாளையம் சேந்தமங்கலம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற தலித்மக்களுக்கு எதிரான வன்கொடுமை குறித்தும்,காவல்துறையின் நடவடிக்கை குறித்தும் தனியார் திருமண மண்டபம் மற்றும் உரிமையாளர் மீது நடவடிக்கை குறித்தும் தமிழ் புலிகள் கட்சி பொதுச்செயலாளர் அண்ணன் மு.இளவேனில் தலைமையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனுகொடுக்கப்பட்டது.
மாவட்ட செயலாளர் ப.செந்தமிழன் பெயரில் அம்மனு அளிக்கப்பட்டது. உடன் இரா.கோபி மாவட்ட கொள்கைபரப்பு செயலாளர்,கு.அறிவழகன் மாவட்ட பொருப்பாளர்,அறிவழகன் மாவட்ட துணை செய்திதொடர்பாளர்,சுப்பிரமணி புதுச்சத்திரம் ஒன்றிய பொருப்பாளர்,க.வஜ்ரவேல் பள்ளிபாளையம் ஒன்றிய செயலாளர் ஆகியோருடன் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் தீராஜ்குமார் ,மாது ஆகியோர் பங்கேற்றனர்.