காரைக்குடி : தேமுதிகவின் நிரந்தரப் பொதுச் செயலராக, கட்சியின் தலைவர் விஜயகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணைப் பொதுச் செயலராக, எல்.கே. சுதீஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
காரைக்குடியில் நடைபெறும் தேமுதிகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் மிக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, தேமுதிக தலைவராக இருக்கும் விஜயகாந்த், பொதுச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து செயற்குழு, பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேமுதிகவில் இதுவரை பொதுச் செயலர் பதவி இல்லை. தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கட்சியில் எத்தகைய முடிவு எடுக்கப்பட வேண்டும் என்ற அதிகாரம் விஜயகாந்துக்கு வழங்கப்படுகிறது.
மேலும், துணைச் செயலராக விஜயகாந்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ், பார்த்தசாரதி, ஏ.ஆர்.இளங்கோவன் உட்பட 4 பேரை நியமித்துள்ளார் விஜயகாந்த்.
தேமுதிக அவைத் தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாளார் பதவிக்கு இளங்கோவை தேர்வு செய்துள்ளார் விஜயகாந்த்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…