அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் காவல் நிலைய ஆய்வாளருக்கு ஐகோர்ட் ஆணை….!
அரியலூர் மாணவி அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் என அரியலூர் மாவட்ட செந்துறை காவல் நிலைய ஆய்வாளருக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்கவில்லை என்று மனு அளிக்கப்பட்டது. ரஞ்சன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் அனிதா மரணம் குறித்து அளிக்கப்பட்ட புகாரை விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.