மாமனாரின் ஆசைக்கு இணங்க மருமகள் அடித்து கொலை……!
மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த துறையூரை சேர்ந்த கூலி தொழிலாளி முருகன். இவரது மனைவி அம்பிகா(24). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முருகனின் தந்தை பெரியசாமி(59), ஆடு வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த 6 மாதத்துக்கு முன், வீட்டில் தனியாக இருந்த அம்பிகாவிடம், பெரியசாமி பாலியல் ரீதியாக தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.அப்போது அம்பிகா சத்தம் போடவே, அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வந்து, பெரியசாமியை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த அம்பிகாவிடம் பெரியசாமி தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதற்கு அம்பிகா இணங்க மறுத்ததால், ஆத்திரமடைந்த பெரியசாமி, அங்கு கிடந்த இரும்பு ராடை எடுத்து அம்பிகாவின் தலையில் பலமாக தாக்கினார்.
இதில் படுகாயமடைந்த அம்பிகா உயிரிழந்தார். பெரியசாமி அங்கிருந்து ஓடிவிட்டார். மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த அம்பிகாவின் மகன் ஜோதிமணி, ரத்த வெள்ளத்தில் தாய் இறந்து கிடந்தது கண்டு கத்தினான். அப்பகுதியினர் அளித்த புகாரின்பேரில் கருமலைக்கூடல் போலீசார் வழக்கு பதிந்து பெரியசாமியை தேடி வருகின்றனர்.