சேலத்தில் டெங்குவினால் குடிக்கபட்ட உயிர்கள்… கண்டுகொள்ளாத ஆட்சியாளர்கள்….!
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு பலியானோர்கள் எண்ணிக்கை மற்ற மாவட்டங்களை ஒப்பிடுகையில் கிட்டத்தட்ட 20 பேரை தொடுகிறது.இத்தனை அவலநிலை போக்குவதற்காகவும் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க கோரியும் சேலம் மாவட்ட தலைநகரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வரும் 9 ஆம் தேதி நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இவகைகள் மீது எவ்வித அக்கறை செலுத்தாமல் தொடர்ந்து எம்.ஜி.ஆர். நுற்றாண்டு விழாவினை நடத்திக்கொண்டே போகுகிறது மாநில அரசு….