துறைமுகங்களை முதலாளிகளுக்கு தாரைவார்க்க சட்டத் திருத்தம் கிளர்ந்தெழுந்த தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்…!
துறைமுகங்களை கார்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்க சட்டத் திருத்தம் செய்திருக்கிறது மத்திய பிஜேபி அரசு.இதனால் நாட்டின் பொருளாதார சுயசார்பு, பாதுகாப்பு தொடர்பானது என்பதால் மக்கள் கறமிறங்க வேண்டும் என்று கூறி தூத்துக்குடி மாவட்ட வ.உ.சி துறைமுக தொழிற்சங்கங்களான மார்க்சிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யூ, காங்கிரஸ் கட்சியின் INTUC,DMK தொழிற்சங்கம் , கம்யூனிஸ்ட் கட்சியின் AITUC ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இப்போராட்டத்தில் துறைமுக தொழிலாளர் ட்ரஸ்டி கதிர்வேல் ( INTUC),துறைமுக தொழிலாளர் மற்றொரு ட்ரஸ்டியான ரசல் (CITU) ஆகியோர் பங்கேற்றனர்.