சசிகலாவுக்கு பரோல் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது: எம்.எல்.ஏ. தனியரசு
திருப்பூர்: சசிகலாவுக்கு பரோல் வழங்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டது கண்டனத்திற்குரியது என காங்கேயம் எம்.எல்.ஏ.வும் கொங்கு இளைஞர் பேரவை தலைவருமான தனியரசு திருப்பூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். நாளை அல்லது நாளை மறுநாள் 3 எம்.எல்.ஏ.க்களும் சசிகலாவை சந்தித்து பிரிந்த அணிகளை இணைக்க வலியுறுத்துவோம் என்று அவர் கூறினார். மேலும் பாஜகவின் பிடியில் இருந்தும், அச்சுறுத்தல்களில் இருந்தும் அதிமுக அணிகள் விடுபட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.