இன்று விடுதலை போராட்ட வீரரும், தமிழறிஞருமான நாமக்கல் இராமலிங்கனார் பிறந்த தினம்…!

Default Image

அக்டோபர் 19 1888 விடுதலை போராட்ட வீரரும், தமிழறிஞருமான நாமக்கல் இராமலிங்கனார் பிறந்த தினம்
மக்கள் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”
”தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அதற்கோர் குணமுண்டு”
”கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்
கவலைகள் உனக்கில்லை ஒத்துக்கொள்”
போன்ற பாடல்களைப் பாடிய இவர்
தேசபக்தி மிக்க தமது பேச்சினால் பல இளைஞர்களை தேசத் தொண்டர்களாக மாற்றியவர். அரசின் தடையுத்தரைவையும் மீறி, கூட்டங்களில் சொற்பொழிவாற்றியவர். 1932ல் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றவர்.
‘தமிழ்நாட்டின் முதல் அரசவைக் கவிஞர்’ பதவியும், `பத்ம பூஷண்’ பட்டமும் பெற்றவர். சாகித்திய அகாடமியில் தமிழ்ப் பிரதிநிதியாகவும் பொறுப்பு வகித்தவர். ‘தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா’ என்கிற வீரநடைக்கு வித்திட்ட அவரின் நினைவாக அவர் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாக அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையிலுள்ள அரசு தலைமைச் செயலகப் பத்து மாடிக் கட்டிடத்திற்கும் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்