ரெய்டில் ஏகப்பட்ட தங்கநகைகள் சிக்கியதாக வந்த செய்தி : உண்மை நிலவரம் என்ன ?
கடந்த வியாழக்கிழமையன்று சசிகலா மற்றும் T.T.V.தினகரன் அகியோர் வீடு, அலுவலகம், அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மேலும் அவர்களின் உறவினர்கள் என சசிகலாவிற்கு நெருக்கமான அனைவரது வீட்டிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் இன்னும் சோதனை நடந்து வருகிறது.
இந்த அதிரடி வருமான வரி சோதனைக்காக மட்டும் மொத்தம் 2000 அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதில் மொத்தம் 300 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 187 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் எக்கச்சக்கமான தங்கம் கிடைத்ததாக ஒரு வதந்தி நிலவியத.இந்நிலையில் இது உண்மை தகவல் இல்லை என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.