கோவில்பட்டியில் டெங்குவை கட்டுப்படுத்த கோரி வாலிபர்கள் போராட்டம்….!
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் (DYFI) கோவில்பட்டி பகத்சிங் ரத்த தான கழகம் சார்பில் சே நினைவு நாளில் டெங்குகாய்ச்சலை கட்டுப்படுத்த கோரி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்பாட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து,இடதுசாரி இயக்கத்தின் தலைவர் பாபு,ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சக்திவேல் முருகன்,ரத்த தான கழகத்தின் பொறுப்பாளர் அந்தோணி செல்வம்,செயலாளர் காளி மற்றும் உமா சங்கர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.