திருச்சியில் வாலிபர்கள் போராட்டத்தால் சரி செய்யப்பட்ட கழிவு நீர் கால்வாய் அடைப்பு…!
திருச்சி மாநகராட்சி 65வது வார்டில் கக்கன் காலனி செல்லும் சாலையில் இராமலிங்கம் பில்டிங்கின் சாக்கடை கழிவு சாலையில் ஓடுவதை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்றும் நடவடிக்கையில்லாத நிலையில் இன்று (5.10.17) காலை துப்புரவு தொழிலாளர்களை சிறைப்பிடித்து மாநகராட்சி அதிகாரிகள் அனைவரையும் சம்பவ இடத்திற்கு வர செய்து உடனடி தீர்வு வேண்டுமென விடப்பிடியாக வாலிபர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் களத்தில் நின்று போராடி மாநகராட்சியின் மூலம் கழிவு நீர் அகற்றும் வாகனம் கொண்டு வரப்பட்டு அடைப்பை சரி செய்யப்பட்டுள்ளது.