புயல்களால் தமிழத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாக பரவி வரும் தகவல் பொய்யானது: வானிலை ஆய்வு மையம்…
தமிழத்தில் வடகிழக்கு பருவ மழை தொடர்பாக டெல்லியில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் ஒன்றை அறிக்கை வெளியிட்டுள்ளது என்றும் அதில் அக்டோபர் 7ஆம் தேதியும் 12ஆம் தேதியும் வங்கக் கடலில் உருவாகும் இரண்டு புயல்களால் தமிழகத்து ஆபத்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் உருவாகும் புயல் 11ஆம் தேதியும், 2ஆவது புயல் 15 முதல் 20ஆம் தேதிக்கு உட்பட்ட நாட்களில் கரையைக் கடக்கலாம். முதல் புயல் கரையைக் கடக்கும்போது, தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் நல்ல மழை பெய்யும். இரண்டாவது புயல் கரையைக் கடக்கும்போது, தமிழகத்தின் தென்கிழக்கு கடலோர மாவட்டங்களில் நல்ல காற்றுடன் மழை பெய்யலாம். சேதமும் இருக்கும் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் இத்தகைய செய்திகளை எந்த ஒரு ஊடகத்துக்கும் அளிக்கவில்லை என்பதே உண்மை என்றும் இரு புயல்கள் தமிழகத்தைத் தாக்கும் என்பது முற்றிலும் பொய்யான வதந்தி என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.