நடமாடும் மருத்துவக்குழு சேவையை இன்று தொடங்கியது…
மழைக்காலத்தில் மக்களுக்கு ஏற்ப்படும் தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 200 நடமாடும் மருத்துவக்குழு சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ குழுக்கள் மக்களை தேடி சென்று நோய்கள் பரவாமல் இருக்க மருத்துவ சேவை அளிக்கும். ஒவ்வொரு வாகனத்திலும் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும்.