இது வரை தமிழகத்தில் நடந்துள்ள கந்துவட்டி கொடூரங்கள் !இனியாவது தீர்வு கிடைக்குமா ?
GV என்ற சினிமா ஜாம்பவான் கந்து வட்டி மிரட்டலால் தற்கொலை செய்து கொண்டதை ஒட்டி தமிழ்நாடு அனியாய வட்டி தடுப்பு சட்டம் 2003 கொண்டுவரப்பட்டது. இதன் பிறகும் மாநிலம் முழுவதும் சென்னை முதல் குமரி வரை 100 மேற்பட்ட கொலைகள், தற்கொலைகள், குடும்பம் குடும்பமாக மாய்த்து கொண்ட சம்பவங்கள். அனைத்துக்கு கந்துவட்டி கும்பலுடன் கரம் கோர்த்து நடக்கும் காவல்துறை என்ற அரசு இயந்திரமே காரணம்… சென்னை உயர்நீதிமன்றம் ‘ஆபரேஷன் குபேரா’ ஏற்படுத்த சொல்லி உத்தரவிட்டு இரண்டு வருடம. கடந்து விட்டது… இருந்தும் ஒவ்வொரு கொலையும் நடக்கும் பொழுது அனுதாபம் மட்டும் தெரிவித்து மறந்து விடுகிறோம்…
தமிழகத்தில் நடந்த சில கந்துவட்டி கொலைகள்…
- 11.03.2010 நாமக்கல், பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் வேலுச்சாமி, அந்த பகுதியில் கந்துவட்டி கும்பலின் அடாவடி தனத்தை எதிர்த்து புகார் கொடுத்ததால் வெட்டி கொல்லப்பட்டார்….
- 1.12.2014 நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஆட்டோ தொழிலாளி கோபி, ஊரை மிரட்டும் கந்து வட்டி கும்பலுக்கெதிராக காவல்நிலையத்தில் மக்கள் சார்பாக புகார் கொடுத்த காரணத்தால் வெட்டி கொலை…
- 20.10.2016 நெல்லையில் 4 பேர் குடும்பமாக தற்கொலை ..
- 26.2.2014 கோவை கணவன் தூக்கிட்டு தற்கொலை…
- 26.10.2013 தூத்துக்குடி கந்து வட்டி கும்பலுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொன்னவரின் 14 வயது மகளை தண்ணீர் தொட்டியில் அமூக்கி கொலை செய்ய முயற்சி…
- 25.10.2012 கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் தற்கொலை..
- 23/10/2017 நெல்லையில் இசக்கி முத்து குடும்பம் தீக்குளிப்பு 3 பேர் பலி – இசக்கி முத்து கவலைக்கிடம். இன்னும் இது தொடரும் நிலையிலே உள்ளது .