தமிழக மாணவர்கள் மூவர் ரஷ்யாவுக்கு கலைப் பயணம்

Default Image

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின்நிலைய ஊழியர்களின் மகன்கள் மூவர் ரஷ்ய நாட்டிற்கு சுற்றுப்பயணம் செல்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தற்போது இரண்டு அணுமின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. மூன்று, நான்காவது அணு உலைகளின் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.இந்த அணு உலைகள், ரஷ்யாவின் அணு ஆற்றல் கழகமான’ரொசாட்டம்’ என்னும் அமைப்புடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரொசாட்டம் அமைப்பினர், சர்வதேச அளவில் குழந்தைகள் கலைத்திட்டமாக ‘நியூக்ளியர் கிட்ஸ்’ அமைப்பை இயக்கி வருகிறது. இந்த அமைப்பு, வெளிநாடுகளில் உள்ள அணுமின் நிலையப் பணியாளர்களின் குழந்தைகளை ஒருங்கிணைத்து, ரஷ்யாவில் பன்னாட்டு இசை விழாவை நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க கூடங்குளம் மாணவர்கள் ரஷ்யா செல்கின்றனர். கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில் செயல்படும் பள்ளியில் பயிலும் பணியாளர்களின் குழந்தைகள் ஆர்.பூர்ணபிரகாஷ், ஆர். சூரியகுமார், கே.ஹரிஹரன் ஆகிய மூன்று மாணவர்கள், தகுதிப் போட்டிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் ரஷ்யா செல்கின்றனர்.

ரஷ்யாவில் இசை, நடனம், நீச்சல் மற்றும் உடற்பயிற்சியுடன், பிற நாட்டு மாணவர்களுடன் பழகுதல் எனப் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடக்கும். ரஷ்யாவில் உள்ள அணு மின் நிலையங்களையும் மற்றும் பல வரலாற்று பூர்வமான iஇடங்களையும்  சுற்றிப் பார்க்கவும் மாணவர்கள் அனுமதிப்படுவார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்