கமலின் அரசியல் பிரவேசத்திற்கு அறிவுரை கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்…!
சென்னை: கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முரசொலி விழாவில் தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம் முக்கியம் என்று நடிகர் கமல் பேசியிருந்தார். இது ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கமல் மறைமுக விமர்சனம் செய்திருந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் சிவாஜி மணிமண்டப விழாவில் கமல் உட்பட பலரது முன்னிலையில் இன்று பேசிய ரஜினி, அரசியலில் வெற்றியடைய சினிமா புகழ் மட்டும் போதாது என்றார்.தமக்கு அரசியல் தெரியாது என்று கூறிய ரஜினி, கமலுக்கு தெரிந்திருக்கலாம் என்றார். சிவாஜி அரசியல் கட்சி தொடங்கி தோற்றதை குறிப்பிட்டு கமலுக்கு ரஜினி அறிவுரை கூறியுள்ளதாக இந்த பேச்சு கருதப்படுகிறது.