பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தையான ஹரிஹரன் நேற்று இயற்கை எய்தினார்….!
பாஜக தேசிய செயலாளரான எச்.ராஜாவின் தந்தையான ஹரிஹரன், சென்னையில் நேற்று இயற்கை எய்தினார்.
கடந்த 3 தினங்களுக்கு முன் எச்.ராஜாவின் மணிவிழா நடந்த நிலையில், அந்த நிகழ்ச்சி முடிந்து இரண்டே நாளில் அவரது தந்தை மறைந்துள்ளார்.
89 வயதான ஹரிஹரன், 1942 முதல் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பணியாற்றி வருகிறார். ஹரிஹரனுக்கு எச்.ராஜாவுடன் சேர்த்து 5 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த எச்.ராஜாவின் தந்தை ஹரிஹரன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அவரது உடல் சொந்த ஊரான காரைக்குடிக்கு கொண்டுவரப்பட்டு இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.