சென்னையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுக்கும் போராட்டம்..!
சென்னையில் இன்று விவசாய தொழிலாளர் சங்கத்தினர் இன்று 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திடகோரியும்,ஓய்வுதியம் வழங்கிட கோரியும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினார்கள்.
இப்போராட்டத்திற்கு விதொச மாநில தலைவர் லாசர் அவர்கள் தலைமை தாங்கினார். மேலும் மத்திய தொழிற் சங்கத்தின் மாநில தலைவர் சௌந்தரராஜன் மற்றும் மாதர் சங்கத்தின் மாநில இனைச்செயலாளர் வாசுகி உட்பட பலர் கலந்து கொண்டனர்