வழக்கறிஞரை தாக்கிய போலீசார் போய் வழக்கும் போட்டுள்ளனர்
திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளுக்கும், மனித உரிமை வழக்குகளுக்கும் ஆஜராகிவரும் வள்ளியூர் வழக்கறிஞர் செம்மணி அவர்களை பனகுடி காவல்நிலைய ஆய்வாளர்,வள்ளியூர் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையை சார்ந்தவர்கள் சட்டவிரோதமாக கடத்திச்சென்று ஒருநாள் முழுவதும் ரகசிய இடத்தில் அடைத்து வைத்து கொடூரமாக அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். மனித மான்புகளுக்கு இழிவுதரக்கூடிய வகையில் நடந்துள்ளனர்.கடைசியாக ஒரு பொய்வழக்கும் ஜோடித்துள்ளனர்.
சட்டம் கற்ற ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரன சமான்யர்களின் நிலைமை……… ?