ரஞ்சி புகழ் நித்தி சுவாமிகள் மதுரை ஆதின மடத்துக்குள் நுழைய கூடாது..,வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகள் காவல் நிலையத்தில் புகார்
மதுரை ஆதின மடத்துக்குள் நித்யானந்தா நுழைய போலீசார் அனுமதிக்கக் கூடாது என்றும் இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும் கூறி வழக்கறிஞர்கள், தனியார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்டோர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை தெரிவித்துள்ளனர்.
மதுரை இளைய ஆதீனமாக நித்யானந்தாவை, ஆதீனம் அருணகிரிநாதர் நியமித்தபோது அதனை இந்து மக்கள் கட்சியினர் எதிர்த்து போராட்டம் நடத்தினர்.
பாலியல் வழக்குகள் உள்ள நித்யானந்தாவாலும், அவர்களின் பெண் சீடர்களாலும், மதுரை ஆதீனத்தின் புனிதம் களங்கமடைந்ததாக அவர்கள் குற்றம்
சுமத்தியிருந்தனர்.
இதனை அடுத்து, மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், நித்யானந்தாவை இளைய ஆதீனமாக நியமித்ததை ரத்து செய்வதாக கூறினார். கடந்த வருடம்
பிள்ளையார்பட்டியைச் சேர்ந்த திருநாவுக்கரசு என்பவரை இளைய ஆதீனமாக அறிவித்தார் அருணகிரிநாதர். இந்த நியமனம் செல்லாது என்று
நித்யானந்தம் வழக்கு தொடர்ந்தார்.
இளைய ஆதீனமாக திருநாவுக்கரசை நியமித்தது தவறு என்றும் அதற்கு பதிலாக ஏற்கனவே நியமிக்கப்பட்ட நித்யானந்தாவே இளைய ஆதீனமாக
செயல்படலாம் என்றும் இந்து மக்கள் கட்சி கூறியுள்ளது.
இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட திருநாவுக்கரசு நல்லவரில்லை என்றும், இவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டவர்தான் என்றும் இந்து மக்கள் கட்சி
குற்றம் சாட்டியுள்ளது.
இந்த சர்ச்சைகளுக்கு நடுவில் இன்று மதுரை விளக்குத்தூண் காவல் நிலையத்தில் வழக்கறிஞர்கள் மற்றும் தனியார் அமைப்புகள் புகார் ஒன்றை
தெரிவித்துள்ளனர்.
அந்த புகாரில் மதுரை ஆதீனத்துக்குள் நித்யானந்தாவை நுழைய போலீசார் அனுமதிக்கக் கூடாது என்று அவர்கள் கூறியுள்ளனர். மதுரை ஆதீனத்துக்குள்
நித்யானந்தா நுழைந்தால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை வரும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில வருடங்களாக மதுரை ஆதீனம் பல்வேறு எதிர்ப்புகளை பெற்று வருகிறது. இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமனத்துக்குப் பிறகு மேலும் பல சிக்கல்களை கண்டு வருகிறது மதுரை ஆதீனம்.