சேலத்தில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் நீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்…!
சேலம் மாநகராட்சி 24வது கோட்டம் புதிய பஸ்நிலையத்தை அடுத்து சினிமாநகர் பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் திமுக (DMK), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPIM), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட பல்வேறு கட்சி அமைப்பினரும், பொதுமக்களும் சாலை மறியல் போராட்டம் இன்று காலை 8.30மணி முதல் 9.30மணிவரை நடைபெற்றது.
காவல்துறை, வருவாய்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து மழைநீரை வடிப்பதற்க்கான நடவடிக்கையில் உடனே ஈடுபட்டதால் போராட்டம் கைவிடபட்டது.