திண்டுக்கல் மாவட்டநூலக அலுவலர் பழனிச்சாமி கரூர் காந்திகிராமத்தில் குடியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்.இவரது மகன் வேல்முருகனுக்கும் கரூர் வெண்ணைமலை நாவல்நகர் கவுண்டர் இனத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் மகள் நிவேதாவிற்கும் இருகுடும்பத்தாரால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இன்று (01.11.2017) காலை வெண்ணைமலை பாலசுப்பிரமணி சுவாமி கோவிலில் நடைபெற திட்டமிட்டிருந்தனர். மாலை கரூர் சின்ன கொங்கு மண்டபத்தில் திருமண வரவேற்பு வைத்திருந்த நிலையில் சாதி ஆதிக்க வெறியர்கள் வாட்ஸ்ஆப் மூலம் செய்திகளைப் பரப்பி சாதி மறுப்பு திருமணத்திற்கு பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியதால் வரவேற்பு நடத்திட மண்டபம் தர மறுத்துவிட்டார்கள். நடைபெறவுள்ள திருமணத்தை நிறுத்தவும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்த சாதி வெறி காதல் ஜிகாத் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் கே.கந்தசாமி மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு எடுத்து சென்றார்.
2 இன்ஷ்பெக்டர்கள் 2 சப் இன்ஷ்பெக்டர்கள் 10 காவலர்கள் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பில் தற்போது தான் திருமணம் நடைபெற்றது.
மணமக்களுக்கும்,பெற்றோர்களுக்கும் வாழ்த்துக்கள். சி.பி.எம் கட்சிக்கும்
காவல்துறைக்கும் அந்த ஜோடி நன்றி தெரிவித்தது .
திருமணத்தை அவர்கள் விரும்பியபடி நடத்த முடியவில்லை.மண மகன் வீட்டில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
அனைவரும் ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைந்து சாதி மறுப்பு திருமண தம்பதியர்களை பாதுகாத்திடுவோம்.
சாதி வெறியர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுப்போம்.
என்று போலீசார் உறுதி கொடுத்தனர் .
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…