கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை உடனடியாக துவங்க வலியுறுத்தல்…!

Default Image

கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை தாமதமின்றி துவங்க வேண்டும் என்று அகழாய்வு நிபுணர்கள் மற்றும் வரலாற்று அறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கீழடியில் நான்காவது கட்ட அகழாய்வை துவங்கவும், இதில் தமிழக தொல்பொருள் ஆய்வுத்துறையை இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

ஆனால் தற்போதைய கீழடி அகழாய்வு அதிகாரியான ஸ்ரீராமன் ஆய்வை முடக்குவதிலேயே குறியாக உள்ளார். கீழடி அகழாய்வை மிகச்சிறப்பாக மேற்கொண்டு பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டுவந்தவரும் மோடி அரசினால் பழிவாங்கும் நோக்கத்துடன் அசாமிற்கு இடமாற்றம் செய்யப்பட்டவருமான கே.அமர்நாத் ராமகிருஷ்ணா கூறுகையில், கீழடி அகழாய்வு குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாவது தொடர வேண்டும். வைகை நதியின் ஓரத்தில் இதேபோன்ற அகழாய்வுகள் பெருமளவில் நடைபெற வேண்டும். ஆய்வுப்பணியை தாமதப்படுத்துவது என்பது நகர்ப்புற மயமாக்கல் காரணமாக பாதிக்கப்படக்கூடும் என்று எச்சரித்தார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் கூறுகையில், கடந்த ஆய்வுகளில் 2500 சதுர மீட்டர் அளவுக்கு ஆய்வு நடந்த நிலையில் மூன்றாவது கட்ட அகழாய்வின்போது நானூறு சதுர மீட்டரில் மட்டும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.கீழடி அகழாய்வை தாமதப்படுத்துவதில் பெரும் சதி உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.மூத்த ஐஏஎஸ் அதிகாரியும் ஒரிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளருமான ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழர்களின் நகர நாகரிகம் குறித்த பெரும் கண்டுபிடிப்பாக கீழடி விளங்குகிறது. சிந்து சமவெளி நாகரிகத்திற்கு இணையான நாகரிகத்தை முழுமையாக வெளிக்கொணர வேண்டும் என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்