தூத்துக்குடியில் ரவுடி போலீசார் மோதல்…போலீஸ்க்கு அருவா வெட்டு…ரவுடிக்கு தொடையில் குண்டடி…!
கொலை வழக்கில் சில ஆண்டுகளுக்கு முன்பு கைதான முத்துக்குமாா் என்பவா் மீது முத்தையாபுரம் காவல்நிலையத்தில் 2 நாட்க்களுக்கு முன்பு கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கை இன்ஸ்பெக்டா் உமாமகேஸ்வரன் விசாாித்து வந்த நிலையில் புகாா்தாரரை விஜயராஜ் மீண்டும் மிரட்டப்பட்டதாக வந்த புகாரால் விசாரிக்க சென்ற தனி பிாிவு எஸ்ஐ ரென்னிஸ் போலீஸாருடன் மோதலில் முத்துக்குமாா் அரிவாளால் வெட்டியதில் காயம்பட்ட போலீஸாா் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் முத்துக்குமாாின் இடது கால் தொடையில் குண்டு துளைத்து காயம் பட்டது .அனைவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸாா் தகவல்..