ரெய்டில் சிக்கிய பினாமி ஆவணங்கள் : வருமான வரித்துறை பகீர் ரிபோர்ட்
சமீபத்தில் தமிழகத்தையே பரபரப்பாக வைத்த ஓர் சம்பவம் சசிகலா, T.T.V.தினகரன் ஆகியோர் மற்றும் அவரது உறவினர்கள் என அவர்கள் சம்பந்தப்பட்ட பெரும்பாலானோர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ‘ஆப்பரேசன் க்ளீன் மனி’ என்ற பெயரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சசிகலா உறவினர்கள் பெரும்பாலானோர் தங்களது கார் டிரைவர், வீட்டு வேலையாட்கள், உதவியாளர்கள், நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் என பினாமி பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளனர். இது தொடர்பாக நிறைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக வருமானவரி துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ‘வெளிநாடுகளிலும் சொத்துகள் குவித்திருப்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும். அவர்களாக தெரிவிக்காவிட்டால், கறுப்புப் பண சட்டப்படி விசாரணை நடத்தப்படும்.
தேவைப்பட்டால், இந்த விஷயத்தில் அந்நிய வரி மற்றும் வரி ஆய்வுத் துறை (FTTR) அதிகாரிகளின் உதவியோடு விசாரணை நடத்தப்படும். சம்பந்தப்பட்டவர்களது வங்கிக் கணக்குகள் எதுவும் இதுவரை முடக்கப்படவில்லை. சோதனை முழுவதும் முடிந்த பிறகு, தேவையானால் அந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நன்கு ஆலோசித்து, மிகவும் திட்டமிட்ட பிறகே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதுபற்றிய தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்.’ இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.