பயிர் காப்பீட்டு தொகையை குறைத்து கொடுத்த வேளாண்மை கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள்…!
பயிர் காப்பீட்டு தொகை அரசு அறிவித்த 52.17 விட 31%குறைவாக கொடுத்ததால் மயிலாடுதுறை ஒன்றியம் கீழப்பெருதாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ,மாவட்ட தலைவர் S.துரைராஜ் தலைமையில் மக்களை திரட்டி சாலை மறியல் நடைபெற்றது. வட்டாட்சியர் விரைந்து வந்து பத்து நாட்களுக்குள் தருவதாக கையெழுத்து போட்டுக்கொடுத்துள்ளார்.அதன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்க பட்டது..