இன்னும் இரண்டு நாள்களுக்கு கனமழை தொடரும் !வானிலை ஆராய்ச்சி மையம் தகவல் …
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என வானிலை இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும். மேலும் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வங்கக் கடலில் மையம் கொண்டுள்ளது.