தொகுதிப் பங்கீடு இழுபறி: முக்கிய நிர்வாகிகளுடன் விசிக அவசர ஆலோசனை..!
அசோக்நகரில் உள்ள அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
தொகுதி பங்கீடு தொடர்பாக நேற்று முன்தினம் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. என் இந்த பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், நேற்று மாலை 06.30 மணிக்கு மீண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பங்கீடு தொடர்பாக 2-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தை ரத்தானது.
இந்நிலையில், திமுகவுடன் இன்று 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதற்கிடையில், சென்னை அசோக்நகரில் உள்ள அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் இன்று அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.
9 தொகுதிகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்கும் நிலையில், திமுக சார்பில் 5 தொகுதிகள் தர திமுக முன்வந்துள்ளது எனவும், உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட என திமுக சார்பில் கேட்டுக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே திமுக கூட்டணியில் உள்ள ஐ.யூ.எம்.எல் கட்சிக்கு 3 இடங்களும், ம.ம.க.விற்கு 2 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.