பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் பாமக நிறுவுனர் ராமதாஸுடன் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. தைலாபுரம் இல்லத்தில் ராமதாஸை சந்தித்து, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்கும் பாமக கோரிக்கை பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
இதனிடையே, பாமக நிறுவனர் ராமதாஸை தைலாபுரம் இல்லத்தில் கடந்த மாதம் 22-ஆம் தேதி அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் ஜி.கே. மணி தலைமையிலான குழு முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் இரு தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியது. தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமக இடம்பெறுவது உறுதியாகும் என தெரிகிறது.
கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் வன்னியர் சமுகத்திற்கு தனியாக 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக்கோரி பாமக பல்வேறு போராட்டம் நடத்தி வருகிறது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிரிவில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கவும், இதனை சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு முன்னதாக நிறைவேற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வெயில் மக்களை வாட்டி வதைத்த நிலையில், இன்று கோடை மழை பெய்து குளிர்ச்சியை…