சிவில் சார்விஸ் தேர்வில் வெற்றிபெற்றுள்ள பார்வையற்ற மதுரை பெண்!
மதுரையில் உள்ள பார்வையற்ற மாணவி சிவில் தேர்வில் வெற்றி பெற்று உள்ளார்.
மதுரை மாவட்டத்திலுள்ள மணிநகரத்தை சேர்ந்தவர் தான் முருகேசன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரும் அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 25 வயதான மூத்த பெண் பூரண சுந்தரி என்பவருக்கு பிறப்பிலிருந்தே கல்வி ஆர்வம் அதிகம் இருந்தாலும், ஆறாவது வயதில் ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவால் பார்வை இழந்துள்ளார். இருந்தாலும் படிப்பு ஆர்வம் குறையாததால் தொடர்ந்து பெற்றோர் உதவியுடன் படித்து வந்த இவர், மதுரை பாத்திமா கல்லூரியில் பிஏ ஆங்கிலம் நிறைவு செய்து இருந்தார்.
அதோடு தனது கல்வி பயணத்தை முடிக்க விரும்பாமல் மக்கள் பணிக்கு செல்ல விரும்பியவர் 2016இல் சிவில் சர்வீஸ் தேர்வு எழுதியுள்ளார். தொடர்ந்து 4 முறை தோல்வி அடைந்திருந்தாலும் இவர் தற்போது ஐந்தாவது முறையாக எழுதி வெற்றியடைந்துள்ளார். ஆம், தமிழகத்தில் இந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் பார்வையற்ற இருவர் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பூரண சுந்தரி. பார்வையில்லாததை தன்னுடைய பலவீனமாக கொள்ளாமல் அதையே தன்னுடைய பலனாக கொண்டு தேர்வில் வெற்றி பெற்று உயர்ந்து நிற்கிறார் பூரண சுந்தரி.