தேர்வில் முறைகேடு : கருப்பு ஆடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் ஜெயக்குமார்

Published by
Venu

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4  தேர்வு முறைகேடு குறித்து தொடர்பாக அதிகாரிகளுடன், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக பயிற்சி மையங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தனி மசோதா வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு  கடந்த ஆண்டு நடைபெற்ற நிலையில் இந்த முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.இதன் அடிப்படையில்,  தேர்வாணையம் நடத்திய விசாரணையில், 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்தது மட்டும் அல்லாமல் ,அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத கூடாது என்ற தடையும் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.இதனிடையே டி.என்.பி.எஸ்.சி குரூப்-4  தேர்வு முறைகேடு தொடர்பாக அதிகாரிகளுடன், அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் பேசுகையில்,  டி.என்.பி.எஸ்.சி முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக பயிற்சி மையங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தொடர்பாக தனி மசோதா வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும்.குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட அனைத்து கருப்பாடுகளும் களையெடுக்கப்பட்டு, எதிர்காலத்தில் கருப்பாடுகளே இல்லாத நிலையை தமிழக அரசு உருவாக்கும்.தேர்வை ரத்து செய்ததால் ஞாயமாக தேர்வு எழுதியவர்களின் நிலை என்னாவது என்றும் கேள்வி எழுப்பினார்.  ஒரு சில மையங்களில் நடந்த முறைக்கேட்டால் ஒட்டுமொத்தமாக குறைகூற கூடாது.தரவரிசைப் பட்டியலில் அடுத்த நிலையில் இருப்பவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.  

  

 

Published by
Venu

Recent Posts

எகிறிய தங்கம் விலை… தங்கம் விலை ரூ.640 உயர்வு!

எகிறிய தங்கம் விலை… தங்கம் விலை ரூ.640 உயர்வு!

சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…

41 mins ago

ரஜினி – சீமான் சந்திப்பு: விஜய்க்கு எதிரான நடவடிக்கை? பின்னணி என்ன?

சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…

43 mins ago

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா விவாகரத்து: “இருவரும் மகிழ்ச்சியாக இல்லை”…உண்மையை உடைத்த

சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…

53 mins ago

“ரஷ்யாவை தாக்க ஏவுகணை வழங்கும் நாடுகளையும் தாக்குவோம்”! அதிபர் புதின் கடும் எச்சரிக்கை!

ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…

1 hour ago

ஒரே நிகழ்ச்சியில்…ஒரே வரிசையில் பாராமுகத்தில் தனுஷ்-நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…

2 hours ago

Live : திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் …இந்தியா-ஆஸி. டெஸ்ட் போட்டி வரை..!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…

2 hours ago