மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது.!

பிரதமர் மோடி தமிழகம் வருகையையொட்டி கருப்புக்கொடி போராட்ட 100க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் பேச்சாரத்திற்காக தாராபுரம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் கருப்புக்கொடி காட்டி, பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்னன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்களை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கோவையில் #GoBackFascistModi எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பிரதமர் மோடி, கேரளாவில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். கேரளாவில் பாலக்காடு பிரச்சாரத்தை முடித்த பின், திருப்பூர் மாவட்டம் தாராப்புரத்தில் பாஜக மாநில தலைவர் எல் முருகனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025