அதிமுகவின் அம்மா நாளிதழ் வேல் யாத்திரை நடத்தும் பாஜக-வினரை மறைமுகமாக எச்சரித்துள்ளது.
பாஜக கட்சி சார்பில் நவம்பர் 6-ம் தேதி முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை யாத்திரை நடத்துவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த யாத்திரை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி பாஜக-வினர் யாத்திரை நடத்தினர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் காண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து அதிமுகவின் அம்மா நாளிதழ் வேல் யாத்திரை நடத்தும் பாஜக-வினரை மறைமுகமாக எச்சரித்துள்ளது. அதன்படி, ‘மதங்களின் பெயரால் வாக்கு வங்கி அரசியலுக்கு வழி தேடுவது அதிமுக அனுமதிக்காது. சாதி மதங்களுக்கு அப்பாற்பட்ட அதிமுக இதை அனுமதிக்காதுஎன்பதை யாத்திரை செல்வோர் உணர வேண்டும்.
சாதி மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் உள்நோக்கம் கொண்ட யாத்திரை, ஊர்வலங்களை தமிழகம் ஆதரிக்காது. அமைதி தவழும் தமிழகத்தில், மக்கள் பின்பற்றும் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை உணர்ந்து நடக்க வேண்டும். அது கருப்பர் கூட்டம் ஆனாலும் சரி காவி கொடி பிடிப்பவர்கள் ஆனாலும் சரி.’ என்று குறிப்பிட்டுள்ளது.
சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் 13 கிராமங்களை சேர்ந்த ஊர்மக்கள் 900…
வங்கதேசம் : கிரிக்கெட்அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தன்னுடைய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தான் கட்சி தொடங்குவதற்கு முன்னர், இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பின்…
சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் பிக் பாஸ் போட்டி மிகவும் பிரபலம். இந்த பிக் பாஸ்…
டெல்லி : கோ கோ உலக கோப்பை போட்டிகள் கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி நேற்று (ஜனவரி 19)…
காஞ்சிபுரம் : சென்னைக்கு 2வது விமான நிலையம் அமைக்கும் பொருட்டு காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 5 ஆயிரம் ஏக்கரில்…